செய்திகள்
தானியங்கி தெர்மல் ஸ்கேனர் கருவி

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தானியங்கி தெர்மல் ஸ்கேனர் கருவி

Published On 2020-12-04 10:36 GMT   |   Update On 2020-12-04 10:36 GMT
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் தானியங்கி தெர்மல் ஸ்கேனர் கருவி பொருத்தப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு வேலை நாட்களில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் தானியங்கி தெர்மல் ஸ்கேனர் கருவி பொருத்தப்பட்டு உள்ளது. அலுவலகத்திற்கு பல்வேறு வேலை காரணமாக வரும் அலுவலர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் இந்த கருவியின் முன்பு தான் நடந்து செல்ல வேண்டும். அப்போது இக்கருவி தானாகவே அதன் முன்பு நடந்து செல்வபவர்கள் உடல்வெப்பநிலையை கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. காய்ச்சல் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டு அதிக உடல் வெப்பநிலை உள்ளவர்கள் அதன் முன்பு சென்றால் அலாரம் அடிக்கும் வகையிலும் இந்த கருவி உள்ளது.

கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்கு இந்த கருவி மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News