செய்திகள்
ராமசாணிக்குப்பம் ஏரி தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு கிடக்கும் காட்சி.

30 ஆண்டுகளாக நிரம்பாத ராமசாணிக்குப்பம் ஏரி

Published On 2020-12-04 10:28 GMT   |   Update On 2020-12-04 10:28 GMT
கண்ணமங்கலம் அருகே ராமசாணிக்குப்பம் கிராமத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரி 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிரம்பாமல் உள்ளது என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கண்ணமங்கலம்:

ஆரணி தாலுகா ராமசாணிக்குப்பம் கிராமத்தில் ஏரி உள்ளது. வண்ணாங்குளம் ஏரி நிரம்பி அதில் இருந்து வெளியேறும் உபரிநீர் ராமசாணிக்குப்பம் ஏரிக்கு கால்வாய் வழியாக வரும். இந்த நீர்வரத்து கால்வாயை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் தண்ணீர் வருவது தடைபட்டுள்ளது.

அதேபோன்று காளசமுத்திரம் ஏரி உபரி நீர் மற்றும் கொளத்தூர் நல்ல தண்ணீர் குளத்திலிருந்து வரும் உபரி நீர் ஆகியவையும் வண்ணாங்குளம் ஏரிக்கு வரும். அந்த கால்வாய்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் காரணமாக நீர்வரத்து கால்வாய் காணாமல் போனதாகவும், அதனால் ஏரிக்கு தண்ணீர் வருவதில்லை என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

தற்போது பெய்த புயல் மழைகாரணமாக அனைத்து ஏரி, குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரித்து, நிரம்பி உள்ள நிலையில் ராமசாணிக்குப்பம் ஏரி மட்டும் நிரம்பாமல் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே உள்ளது. கடந்த 30 வருடங்களாக இந்த ஏரி நிரம்பாத நிலை தொடர்கிறது.

எனவே ராமசாணிக்குப்பம் மற்றும் வண்ணாங்குளம் ஏரிகள் நிரம்ப, குடிமராமத்து திட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News