செய்திகள்
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியை நகர காங்கிரஸ் கட்சி சார்பில் வழங்கப்பட்டது

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி - நகர காங்கிரஸ் கட்சி சார்பில் வழங்கப்பட்டது

Published On 2020-11-28 12:17 IST   |   Update On 2020-11-28 12:17:00 IST
கடலூரில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது
கடலூர்:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி உத்தரவின்பேரில் கடலூர் வண்டிப்பாளையம் ராமுமுதலியார் தோட்டத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு நகர தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். 

மாநில பொதுக்குழு என்.குமார், மாநில ஊடகப்பிரிவு செயலாளர் ரவிக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் சாந்திராஜ், மாவட்ட பொருளாளர் ராஜன், மாவட்ட செயலாளர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் தொகுதி தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். 

நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். இதில் மாவட்ட துணை தலைவர் மணி, நகர செயலாளர்கள் சங்கர், கோபால், பாலகுரு, ஊடக பிரிவு வினு சக்கரவர்த்தி, அருள், இளைஞர் காங்கிரஸ் ராமகிருஷ்ணன், ஆட்டோ வேலு, நகர பொருளாளர் ராஜூ சவுக்கார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News