செய்திகள்
பாஜக மாநில தலைவர் முருகன்

நிவர் புயல்- தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டதால் பாதிப்பு குறைவு: முருகன்

Published On 2020-11-27 06:13 GMT   |   Update On 2020-11-27 06:13 GMT
நிவர் புயலுக்கு தமிழக அரசு எதிர்பார்த்ததை விட சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் பாதிப்பு குறைவாக காணப்பட்டது என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

கடலூர்:

வங்க கடலில் உருவான ‘நிவர்’ புயல் வலுவிழந்து கரையை கடந்தது. பலத்த காற்று வீசியதால் கடலூர் மாவட்டத்தில் விளை நிலங்கள் சேதமடைந்தது.

பாதிக்கப்பட்ட பகுதிகளை பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் பார்வையிட்டு அங்குள்ளவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு எதிர் பார்த்ததை விட சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் பாதிப்பு குறைவாக காணப்பட்டது. மக்களுக்கு தேவையான உணவு வசதி, தங்குமிடம் அனைத்தையும் தமிழக அரசு செய்திருந்தது.

பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களும் புயலால் பாதித்த மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர். அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளை செய்து கொடுத்தனர்.

அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை நாங்கள் உறுதி படுத்தினோம். தமிழக அரசு புயல் பாதிப்பு குறித்து கேட்பதை வைத்து மத்திய அரசு நிதி ஒதுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News