தேவகோட்டையில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தேவகோட்டையில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
பதிவு: நவம்பர் 23, 2020 12:26
முககவசம்
தேவகோட்டை:
தேவகோட்டை வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் பிரபாவதி தலைமையில் நகராட்சி அலுவலர்கள் நேற்று தியாகிகள் சாலை, திருப்பத்தூர் சாலை, பஸ் நிலையம்
ஆகிய இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாதவர்களை பிடித்து தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் பஸ்களில் ஏறி
சோதனை நடத்தினர். பின்னர் இது குறித்து டாக்டர் பிரபாவதி கூறும் போது, இன்று (திங்கட்கிழமை) முதல் அனைத்து வணிக வளாகங்கள், வியாபார நிறுவனங்கள்
ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். வாடிக்கையாளர்கள் முககவசம் அணிந்து வந்தால் தான் பொருட்கள் தர முடியும் என்பதை
வியாபாரிகள் உறுதியாக அறிவிக்க வேண்டும். இது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றார்.