செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2020-11-08 14:23 IST   |   Update On 2020-11-08 14:23:00 IST
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை:

வீரமாமுனிவரின் 340ஆவது பிறந்தநாளையொட்டிச் சென்னைக் கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்குத் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:- 

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெரும், அதனால் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற மக்கள் தீர்மானித்திருக்கிறார்கள். அந்த நிலைதான் 2021இல் வரும். 

இதுவரையில் இல்லாத அளவுக்கு அதிமுக சரித்திரத்தில் அறுதிப் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும். அமெரிக்க துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துக்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Similar News