செய்திகள்
சென்னை மாநகராட்சி

கொரோனா விதிமீறல்: சென்னையில் ரூ.3 கோடி அபராதம் வசூல்- மாநகராட்சி தகவல்

Published On 2020-11-08 07:03 IST   |   Update On 2020-11-08 07:03:00 IST
சென்னையில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டும் சனிக்கிழமை வரை ரூ.3.08 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னையில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிகளான முககவசத்தை அணியாதது, தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காதது மற்றும் வணிக நிறுவனங்களில் ஏ.சி. பயன்பாட்டை தவிர்ப்பது போன்றவை முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை சிறப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

சென்னையில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டும் சனிக்கிழமை வரை ரூ.3.08 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் மட்டும் ரூ.51.82 லட்சமும், மாதவரத்தில் ரூ.30.37 லட்சமும், கோடம்பாக்கத்தில் ரூ.26.92 லட்சமும், குறைந்தபட்சமாக சோழிங்கநல்லூரில் ரூ.5.30 லட்சமும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

முககவசம் அணியாதவர்களிடம் இருந்து மட்டும் ரூ.13.24 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Similar News