செய்திகள்
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.147 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்- கலெக்டர் ஆய்வு
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.147 கோடியே 26 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார்.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று அலுவலர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி வேலூர் கஸ்பா பகுதியில் ரூ.5 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தில் உள்ள நடைபாதை, கிரிக்கெட் மைதானம், பார்வையாளர்கள் அமரும் இடம், ஓடுதளம், நடைபாதை மற்றும் 300 பேர் அமரும் வகையில் அமைக்கப்படும் அரங்கத்திற்கான இடங்களையும், அங்கு நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ரூ.46 கோடியே 51 லட்சம் மதிப்பில் 70 பஸ்கள் நிற்க கூடிய வகையில், பயணிகள் காத்திருப்பு அறை, முதல் தளத்தில் வணிக வளாகம் அமைக்கப்படுவதையும், அந்த பணிகளுக்கு உபயோகப்படுத்தப்படும் இரும்பு ராடுகள், சிமெண்டு கலவைகள் தரம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகள் 40 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக அவரிடம் தெரிவித்தனர்.
அருகில் ரூ.11 கோடி மதிப்பில் 42 கார்கள் மற்றும் ஆயிரம் இருசக்கர வாகனம் நிறுத்தும் வகையில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டிடத்தை பார்வையிட்டார். 90 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் வர்ணம் பூசுகின்ற பணியை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். அப்போது, முத்துமண்டபம் அண்ணாநகரை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு பொதுபாதை வேண்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரண்டு வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.
பின்னர் சர்க்கார் தோப்பு பகுதியில் ரூ.13 கோடியே 24 லட்சம் மதிப்பில் 2.40 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் 70 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ள சோலார் மின் உற்பத்தி திட்ட பணிகளையும், ரூ.69 கோடியே 9 லட்சம் மதிப்பில் நடைபெறும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள், சத்துவாச்சாரி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ராகவேந்திரா நகர் பகுதியில் தலா ரூ.13 லட்சம் மதிப்பில் கட்டப்படும் 3 அங்கன்வாடி மைய பணிகள், வள்ளலார் பகுதியில் உள்ள அறிவியல் பூங்காவில் நடைபாதை, புது தரை அமைக்கும் பணிகள், சி.எம்.சி. மருத்துவமனை பின்பகுதியில் 1.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் ரூ.1 கோடி மதிப்பில் பூங்கா அமைக்கப்படும் இடம் உள்பட மொத்தம் ரூ.147 கோடியே 26 லட்சம் மதிப்பில் நடைபெறும் பல்வேறு பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் சங்கரன், என்ஜினீயர் சீனிவாசன், அரசு போக்குவரத்து கழக மேலாளர் நடராஜன், வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.