செய்திகள்
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர் உள்பட 4 பேருக்கு மீண்டும் கொரோனா தொற்று
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர் உள்பட 4 பேருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனை செய்து வந்தனர். தற்போது கொரோனா பரிசோதனையும் குறைந்துவிட்டது. கொரோனா தொற்றும் குறைந்துவிட்டது. குடியாத்தத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குடியாத்தம், வேலூர் மற்றும் சென்னை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினர். 65-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
குடியாத்தம் தாலுகாவில் வேலூர் மாநகராட்சிக்கு அடுத்தபடியாக கொரோனா தொற்று நோயாளிகள் அதிகம். கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க குடியாத்தத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டது. நோயாளிகள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்ததால் கல்லூரியில் இருந்த சிறப்பு வார்டு விலக்கிக்கொள்ளப்பட்டது. குடியாத்தம் அரசு மருத்துவமனையில் மட்டும் கொரோனா வார்டு செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் கொரோனா பிரிவில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சை பெற்றபின் மீண்டும் அரசு மருத்துவமனையில் பணிக்கு திரும்பினர். இந்த நிலையில் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் பெண் டாக்டர், 2 செவிலியர்கள், ஒரு சுகாதார பணியாளர் என 4 பேருக்கு மீண்டும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. குடியாத்தம் பகுதியில் கொரோனா தொற்று குறைந்து வரும் வேளையில், தற்போது கடந்த ஜூலை மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர், செவிலியர் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.