செய்திகள்
சிறுமியை கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
ஆசை வார்த்தை கூறி 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கங்களாஞ்சேரி, பூண்டி ரெயில்வே கேட் கீழத்தெரு பகுதியை சேர்ந்த தனபால் மகன் தமிழ்ச்செல்வன் (வயது 27). கட்டிட தொழிலாளி. இவர் 13 வயதான சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். சிறுமியின் உடல் தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டதை அறிந்த பெற்றோர் இதுகுறித்து அவரிடம் கேட்டுள்ளனர்.
ஆசை வார்த்தை கூறி தமிழ்ச்செல்வன், தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வனை கைது செய்தனர்.