செய்திகள்
கோப்புபடம்

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-11-03 17:52 IST   |   Update On 2020-11-03 17:52:00 IST
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:

நாகை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் இளவரசன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், மாநில பொருளாளர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த்துறையில் பணியாற்ற கூடிய தாசில்தார் முதல் அலுவலக உதவியாளர் வரை அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். வருவாய்த்துறையில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும். மாநிலம் முழுவதிலும் உள்ள சப்- கலெக்டர்கள் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும்.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 5-ந்தேதி சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டமும், 25, 26 ஆகிய நாட்களில் வேலைநிறுத்த போராட்டமும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. முடிவில் மாவட்ட பொருளாளர் பிச்சை பிள்ளை நன்றி கூறினார்.

Similar News