செய்திகள்
தோகை விரித்தாடிய மயில்.

மடவாமேடு வனப்பகுதியில் தோகை விரித்தாடிய மயில்- மக்கள் பார்த்து ரசித்தனர்

Published On 2020-11-01 12:36 GMT   |   Update On 2020-11-01 12:36 GMT
மடவாமேடு வனப்பகுதியில் ஆண் மயில் ஒன்று தோகை விரித்து ஆடியதை அந்த வழியாக சென்ற மக்கள் பார்த்து ரசித்து சென்றனர்.
கொள்ளிடம்:

நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் தேசிய பறவையான மயில் அதிக அளவில் காணப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் மயில்கள் குறைவாகவே இருந்தன. தற்போது மயில்களின் எண்ணிக்கை அதிகரித்து மயில்கள் தனது குஞ்சுகளுடன் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதி மற்றும் பழையார், சின்னகொட்டாய்மேடு, தொடுவாய், வேட்டங்குடி, எடமணல், சரஸ்வதிவளாகம், கீரங்குடி, குன்னம், வடரங்கம், மற்றும் அனைத்து இடங்களிலும் பரவலாக காணப்படுகிறது.

நேற்று கொள்ளிடம் அருகே உள்ள மடவாமேடு பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் குளிர்ச்சியான காலநிலை உருவாகி மழை பெய்யும் சூழல் உருவானது. அப்போது அங்கு உலாவிக்கொண்டிருந்த ஒரு ஆண் மயில் தோகை விரித்து ஆடியது. திடீரென மயில் தோகை விரித்து ஆடியதை அந்த வழியாக சென்ற மக்கள் பார்த்து ரசித்து சென்றனர்.
Tags:    

Similar News