செய்திகள்
திருவல்லிக்கேணி துணை கமிஷனர் அலுவலகம்

118 ஆண்டு பழமையான கட்டிடம் - திருவல்லிக்கேணி துணை கமிஷனர் அலுவலகமாக புதுப்பிப்பு

Published On 2020-10-27 21:52 GMT   |   Update On 2020-10-27 21:52 GMT
சென்னை சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்த 118 ஆண்டு பழமையான கட்டிடம் திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தர்மராஜனின் அலுவலகமாக மாற்றப்பட்டது.
சென்னை:

சென்னை சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலைய வளாகத்தில் 118 ஆண்டு பழமையான கட்டிடம் இருந்தது. இந்த கட்டிடத்தில் போக்குவரத்து போலீஸ் அலுவலகம், விரல்ரேகை பிரிவு, விபசார ஒழிப்பு பிரிவு போன்ற அலுவலகங்கள் செயல்பட்டன. தற்போது இந்த கட்டிடம் பிரமாண்டமாக பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது.

புதுப்பிக்கப்பட்டு எழில் மிகு கட்டிடமாக கம்பீரமாக காட்சி அளிக்கும் இந்த கட்டிடம், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தர்மராஜனின் அலுவலகமாக மாற்றப்பட்டது. இந்த புதிய கட்டிடத்தை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார்அகர்வால் நேற்று முறைப்படி திறந்து வைத்தார். பின்னர் அந்த கட்டிடத்தின் முன்பு, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போலீஸ் அதிகாரிகளுடன் அமர்ந்து கமிஷனர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
Tags:    

Similar News