செய்திகள்
ஹெல்மெட் விழிப்புணர்வு

திருவண்ணாமலையில் ஹெல்மெட் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம்

Published On 2020-10-25 08:25 IST   |   Update On 2020-10-25 08:25:00 IST
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் ஈசான்ய மைதானத்தில் இருந்து ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள ஈசான்ய மைதானத்தில் இருந்து ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா, உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் கலந்துகொண்டு, ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊர்வலத்தில் போக்குவரத்து போலீசார், சட்ட ஒழுங்கு போலீசார், ஊர் காவல் படையினர் என சுமார் 150 பேர் ‘ஹெல்மெட்’ அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் ஈசான்ய மைதானத்தில் இருந்து பெரியார் சிலை, காந்தி சிலை வழியாக மாட வீதியை சுற்றி வந்து மீண்டும் ஈசான்ய மைதானத்தை அடைந்தனர்.

அதைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் அண்ணா நுழைவு வாயில் வழியாக ‘ஹெல்மெட்’ அணியாமல் சென்ற பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக ‘ஹெல்மெட்’ வழங்கினார். நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் பாரதி, சந்திரசேகரன், சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் பலர் கலந்துகொண்டனர்.

Similar News