செய்திகள்
ஆர்ப்பாட்டம்

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-10-21 08:28 GMT   |   Update On 2020-10-21 08:28 GMT
நாகை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:

நாகை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில், வருவாய்த்துறையின் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். நீதிபதிகள் முருகேசன், சித்திக் ஆகியோர் குழு அறிக்கைகளை பேச்சுவார்த்தை அடிப்படையில் அமல்படுத்த வேண்டும்.கொரோனா பணியில் ஈடுபட்டு உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் நியமனம் வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியினை ஒரே அரசாணையில் பணிவரன்முறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Tags:    

Similar News