செய்திகள்
கோப்புப்படம்

புதுவை அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேருக்கு கொரோனா

Published On 2020-10-19 05:08 IST   |   Update On 2020-10-19 05:08:00 IST
புதுவை இந்திராகாந்தி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி:

5-வது கட்ட ஊரடங்கு தளர்வில் பள்ளி, கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து புதுவையில் கடந்த 8-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பெற்றோர் ஒப்புதலுடன், முககவசம் அணிந்து பள்ளிக்கு வர வேண்டும். அங்கு அவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அவ்வாறே கடந்த சில நாட்களாக மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் புதுவை இந்திராகாந்தி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த 2 வகுப்பறைகளும் மூடப்பட்டன. அந்த வகுப்பறைகளில் படித்த மாணவர்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். ஆசிரியர் கள், மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News