செய்திகள்
தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை நடைபெறுவதை படத்தில் காணலாம்.

தூத்துக்குடியில் பூக்கள் விலை உயர்வு

Published On 2020-10-18 06:50 GMT   |   Update On 2020-10-18 06:50 GMT
தூத்துக்குடியில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் தெய்வச்செயல்புரம், வாகைகுளம், பேரூரணி ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தூத்துக்குடி பூமார்க்கெட்டிற்கு மல்லிகைப்பூ, பிச்சிப்பூ, கனகாம்பரம், சிவந்திப்பூ உள்ளிட்ட பூக்கள் கொண்டு வரப்பட்டு இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக திருமணம், கோவில் விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் பூக்கள் விலை கடுமையாக சரிந்தது. குறிப்பாக கடந்த வாரம் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 1,000 முதல் ரூ.1,200 வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் பிச்சிப்பூ ரூ.800 க்கும், செண்டுபூ ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது தசரா மற்றும் ஐப்பசி மாதம் முதல் திருமணம் நிகழ்ச்சி நடைபெறுவதால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News