செய்திகள்
விபத்து பலி

அந்தியூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

Published On 2020-10-17 19:47 IST   |   Update On 2020-10-17 19:47:00 IST
அந்தியூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர்:

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி. விவசாய தொழிலாளி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டில் துக்கம் விசாரித்துவிட்டு ஊருக்கு மோட்டார்சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார். பர்கூர் மலைப்பாதையில் நெய்கரை என்ற இடத்தில் சென்றபோது, அவர் திடீரென மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிவமூர்த்தி நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த சிவமூர்த்திக்கு ஜெயா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Similar News