செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

சமையல்காரர் வீட்டில் ரூ.1 லட்சம் பொருட்கள் திருட்டு

Published On 2020-10-17 16:13 IST   |   Update On 2020-10-17 16:13:00 IST
சமையல்காரர் வீட்டில் ரூ.1 லட்சம் பொருட்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி:

வாணியம்பாடியை அடுத்த சலாமாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ரகீம் (வயது 40), சமையல்காரர். கடந்தசில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் குடும்பத்தினருடன் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணியளவில் வீடு திரும்பினார். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்தன. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ஒரு பவுன் நகை, வெள்ளிப்பொருட்கள், இதர பொருட்கள், துணிமணிகள் என ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டுப் போய் இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து அவர் வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News