செய்திகள்
கோப்புபடம்

குடிபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய வாலிபருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

Published On 2020-10-10 02:53 IST   |   Update On 2020-10-10 02:53:00 IST
சீர்காழி அருகே குடிபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய வாலிபருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கபட்டது.
சீர்காழி:

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் கடைவீதியில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் உத்தரவின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது வைத்தீஸ்வரன்கோவில் பகுதியை சேர்ந்த தம்பிதுரை(வயது37) என்பவர் குடிபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தரணிதரன் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி குடிபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய தம்பிதுரைக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Similar News