செய்திகள்
கோப்புபடம்

பவானி அருகே சாய்பாபா கோவிலில் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

Published On 2020-10-08 14:23 IST   |   Update On 2020-10-08 14:23:00 IST
பவானி அருகே சாய்பாபா கோவிலில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி:

பவானி அருகே உள்ள ஊராட்சி கோட்டையின் பின் பகுதியில் சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த வாரம் மர்ம நபர் ஒருவர் பூட்டை உடைத்து உள்ளே சென்று, ஒலிநாடாவை திருடிச்சென்றுவிட்டார். அவருடைய உருவம் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதை வைத்து பவானி போலீசார் மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தார்கள்.

விசாரணையின் முடிவில் கோவிலில் ஒலிநாடாவை திருடியவர் பவானியை அடுத்துள்ள காடையாம்பட்டியை சேர்ந்த ராஜா (வயது 23) என்பவர் என்றும், இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும் தெரிந்தது. இதைத்தொடர்ந்து ராஜாவை போலீசார் கைது செய்தார்கள். பவானி அடுத்துள்ள தொட்டியபாளையத்தில் கூட்டுறவு பால் உற்பத்தி நிலையத்திலும் ராஜா திருட முயற்சித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Similar News