செய்திகள்
சென்னிமலை அருகே கஞ்சா விற்றவர் கைது
சென்னிமலை அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே உள்ள முகாசி அனுமன்பள்ளி பஸ்நிறுத்தம் பகுதியில் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக வெள்ளோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ், போலீசாருடன் அங்கு சென்று சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டு இருந்த அந்த நபரை பிடித்து சோதனை செய்தார்கள். அப்போது அவரிடம் சிறுசிறு பொட்டலமாக கட்டப்பட்டு இருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் நடைபெற்ற விசாரணையில் அவர், வெள்ளோடு கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த குணசேகரன் (வயது 34) என்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து குணசேகரனை கைது செய்து, அவர் கஞ்சா விற்று வைத்திருந்த 500 ரூபாயையும் போலீசார் பறிமுதல் செய்தார்கள்.