செய்திகள்
கொரோனா வைரஸ்

சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று

Published On 2020-10-07 12:02 IST   |   Update On 2020-10-07 12:02:00 IST
சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ பாண்டியனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சிதம்பரம் தொகுதி பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர்.

கடந்த 2 நாட்களாக சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ பாண்டியன் உடல் சோர்வுடன் காணப்பட்டார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து டாக்டர்களின் ஆலோசனைபடி சென்னையில் உள்ள அவரது வீட்டில் பாண்டியன் எம்.எல்.ஏ. தனிமைப்படுத்திக் கொண்டார்.

Similar News