செய்திகள்
செட்டி ஏரி தண்ணீரின்றி தூர்ந்து கிடக்கும் காட்சி

அரியலூரில் செட்டி ஏரிக்கான வரத்து வாய்க்கால் தூர்வாரப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Published On 2020-10-02 09:45 GMT   |   Update On 2020-10-02 09:45 GMT
அரியலூரில் உள்ள செட்டி ஏரிக்கான நீர்வரத்து வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அரியலூர்:

அரியலூர் நகரின் மைய பகுதியில் செட்டி ஏரி உள்ளது. இந்த ஏரி ஒரு கிலோ மீட்டர் தூர கரைப்பகுதியும், 10 ஏக்கர் பரப்பளவும் கொண்டது. நிலத்தடி நீருக்கு ஆதாரமாக உள்ள இந்த ஏரி பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. ஏரிக்கு நீர் வரும் வாய்க்கால் மட்டும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரும் பணி நடந்தது.

அப்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கரைகளில் சிமெண்டு கற்கள் பதிக்கும் பணி நடைபெற்றது. பின்னர் அந்த பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இதையடுத்து வாய்க்கால் தூர்ந்து முட்புதர்கள் போன்று காட்சி அளிக்கிறது.

தற்போது அரியலூர் பகுதியில் அதிக அளவில் மழை பெய்தும், ஏரிக்கு தண்ணீர் வரவில்லை. எனவே மழைக்காலத்தில் தண்ணீரை சேமிக்கும் வகையில் வாய்க்காலை உடனடியாக தூர்வாரி ஏரியை ஆழப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
Tags:    

Similar News