செய்திகள்
மயிலாடுதுறையில் பணத்தை திருப்பி தராத தனியார் நிறுவன ஏஜெண்டுகள் கைது
மயிலாடுதுறையில் பொதுமக்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்த தனியார் நிறுவன ஏஜெண்டுகளை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை நல்லத்துக்குடி பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தினர் முதலீடு திட்டத்தில் கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்தனர். இதில் ஏராளமானோர் பணம் கட்டி சேர்ந்தனர். திட்டத்தில் பணம் செலுத்தி சில மாதங்கள் கழிந்த பின்னரும் பரிசு பொருட்கள் மற்றும் கமிஷன் தொகை எதுவும் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த பலர், நிறுவன ஏஜெண்டுகளை தொடர்பு கொண்டு கேட்டனர்.
அதற்கு அவர், கொரோனா ஊரடங்கால் காலதாமதம் ஆவதாக கூறி உள்ளனர். இந்நிலையில் நல்லத்துக்குடி பகுதியில் உள்ள ஒருவர் வீட்டுக்கு வந்த நிறுவனத்தின் ஏஜெண்டை பணம் செலுத்தியவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும் இதுகுறித்து மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து திருப்பூரை சேர்ந்த அன்பழகன், ஞானப்பிரகாசம் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர்.