செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கொரோனா

Published On 2020-09-21 00:17 GMT   |   Update On 2020-09-21 00:17 GMT
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 15,606 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 14,903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது.

4,308 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. 13,473 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். ஒரு சிறப்பு தனிமைப்படுத்தும் மையத்தில் 35 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 367 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. சிவகாசி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த 45 வயது நபர், ஐடியல் ரோட்டை சேர்ந்த 25 வயது பெண், திருத்தங்கலை சேர்ந்த 40 வயது நபர், விருதுநகர் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் 29, 32, 55 வயது நபர்கள், பாவாலி காலனியை சேர்ந்த 50 வயது பெண், கூரைக்குண்டை சேர்ந்த 35 வயது பெண் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அருப்புக்கோட்டை, கல்குறிச்சி, மேலஒட்டன்பட்டி, கிச்சநாயக்கன்பட்டி, தச்சக்குடி, சாத்தூர், கோபாலபுரம், வெம்பக்கோட்டை, பெருமாள்தேவன்பட்டி, குறுக்குப்பட்டி, திருச்சுழி, ஆவியூர், வீ.ராமலிங்காபுரம், செட்டிப்பட்டி, கரிசல்குளம், வெள்ளையாபுரம், பாலவநத்தம், உலக்குடி ஆகிய பகுதியை சேர்ந்த 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 14,950 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 2,028 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 4,308 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. நேற்றும் கிராமப்பகுதிகளிலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அபராதமும் விதிக்க உத்தரவிட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள எந்த துறையினரும் நடவடிக்கை எடுக்காத நிலையில் கொரோனா தொற்று அதிகரிக்கவே வாய்ப்பு ஏற்படும்.

விதிமுறைகளை மீறியதாக 2 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் நகர்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் நோய் தடுப்பு விதிமீறல்கள் அதிகம் உள்ள நிலையில் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
Tags:    

Similar News