செய்திகள்
கொள்ளை

படப்பை அருகே 2 கோவில்களில் திருட்டு

Published On 2020-09-18 15:13 IST   |   Update On 2020-09-18 15:13:00 IST
படப்பை அருகே 2 கோவில்களில் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சாலமங்கலம் ஊராட்சியில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று காலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதேபோல் படப்பை வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் முத்துமாரியம்மன் கோவிலிலும் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை திருடப்பட்டிருந்தது.

இந்த இரு சம்பவங்கள் குறித்து மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News