செய்திகள்
ஜெயராஜ், பென்னிக்ஸ்

ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய் வழக்கு - ஸ்ரீதர் ஜாமீன் மனு விசாரணையில் சிபிஐ தகவல்

Published On 2020-09-08 06:22 GMT   |   Update On 2020-09-08 06:22 GMT
சாத்தான்குளம் வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமீன் மீதான விசாரணையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் மீது பொய் வழக்குபதிவு செய்துள்ளது என சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
மதுரை:

சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
 
இவர்களில் போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ், பிரான்சிஸ் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்தநிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

இந்த வழக்கு குறித்து சி.பி.ஐ. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஜாமீன் அளிக்கக்கூடாது என வாதாடினர். 

அப்போது, சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் மீது பொய் வழக்குபதிவு செய்துள்ளது என சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஸ்ரீதர் ஜாமீன் மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை ஒத்திவைத்துள்ளது. 
Tags:    

Similar News