செய்திகள்
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

வீடுகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்ட அமைச்சர்

Published On 2020-09-06 11:36 IST   |   Update On 2020-09-06 11:36:00 IST
புதுவையில் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பாதுகாப்பு கவச உடை அணிந்து சென்று நேரில் சந்தித்தார்.

புதுச்சேரி:

புதுவையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக புதுவையின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரிசோதனைகள் அதிக அளவில் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வெங்கடேஸ்வரா நகர் தென்றல் நகரில் கட்டுப்பாடு மண்டல பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பாதுகாப்பு கவச உடை அணிந்து சென்று நேரில் சந்தித்தார்.

அப்போது அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து கொரோனா நோயாளிகளின் குறைகளை போக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் கொரோனா நோயாளிகளின் குறையை கலைய உடனடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

அமைச்சருடன் இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குனர் ஸ்ரீராமுலு. கோவிட் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரமேஷ் மற்றும் மருத்துவ அதிகாரிகள் இந்த ஆய்வின் போது உடனிருந்தனர்.

Similar News