செய்திகள்
வழக்கு பதிவு

டாக்டரை தாக்கிய ஊழியர் மீது 4 பிரிவுகளில் வழக்கு

Published On 2020-09-05 16:06 IST   |   Update On 2020-09-05 16:06:00 IST
டாக்டரை தாக்கிய ஊழியர் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

புதுச்சேரி:

புதுவை ஜிப்மர் மருத்துவ மனையில் மயக்க மருந்தியல் துறை டாக்டர் அதிதன்.

தற்போது இவர் கொரோனா வார்டில் பணியாற்றி வருகிறார். கடந்த 31-ந் தேதி இவர் பணியில் இருந்தபோது உதவிக்கு ஊழியர் செந்தில்குமார் என்பவரை அழைத்துள்ளார்.

ஆனால் செந்தில்குமார் வர மறுத்துள்ளார். அப்போது அவர்களுக்குள் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், டாக்டர் அதிதனை தகாத வார்த்தைகளால் திட்டி கையால் தாக்கினார்.

இதனிடையே டாக்டரை தாக்கிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜிப்மரில் டாக்டர்கள் கடந்த 3 நாட்களாக கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் டாக்டர் அதிதன் தன்னை தாக்கிய ஊழியர் மீது கோரிமேடு போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின்அடிப்படையில் ஊழியர் செந்தில்குமார் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News