செய்திகள்
புதுவையில் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 300-ஐ எட்டுகிறது
புதுவையில் நேற்றைய தினம் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 18 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 298 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் நேற்றைய தினம் 1437 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கோள்ளப்பட்டது.
இதில் மாநிலம் முழுவதும் 408 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் புதுவையில் 343 பேருக்கும், காரைக்காலில் 25 பேருக்கும், ஏனாமில் 32 பேருக்கும் மாகியில் 8 பேரும் அடங்குவர்.
தற்போது மருத்துவமனைகளில் 1762 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அதே நேரத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 3399 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை விட இருமடங்காகும்.
ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 16,566 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் 11,107 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று ஒரே நாளில்433 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் இது தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை விட உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் நேற்றைய தினம் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 18 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 298 ஆக உயர்ந்துள்ளது.
இத்தகவல்களை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.