செய்திகள்
கடற்கரை கோவிலில் மத்திய தொல்பொருள் துறை இயக்குனர் ஆய்வு

மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் மத்திய தொல்பொருள் துறை இயக்குனர் ஆய்வு

Published On 2020-09-04 19:40 IST   |   Update On 2020-09-04 19:40:00 IST
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் மத்திய தொல்பொருள் துறை இயக்குனர் ஆய்வு செய்தனர்.
மாமல்லபுரம்:

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் தலைசிறந்த சுற்றுலா மையமாக திகழ்கிறது. 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களின் கலைத்திறனால் உருவாக்கப்பட்ட கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட குடைவரை சிற்பங்கள் உலக புகழ் பெற்ற நினைவு சின்னங்களாக திகழ்கிறது. இவற்றை காண வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் அதிகமானோர் மாமல்லபுரம் வந்து செல்வதுண்டு.கடற்கரை ஓரத்தில் கடற்கரை கோவில், ஐந்துரதம் அமைந்திருப்பதால் அங்குள்ள சிற்பங்கள் உப்புக்காற்றால் பாதிக்கப்படுகிறது. இந்த பாதிப்பை தவிர்க்க தொல்பொருள் ஆய்வுத்துறை வேதியியல் பிரிவு வல்லுனர்கள் மூலம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயன கலவை மூலம் உப்பு படிமங்களை அகற்றி வருகிறது. இருப்பினும் சிற்பங்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகிறது.

உப்பு காற்றால் சிற்பங்கள் பாதிக்காமல் எப்படி பாதுகாப்பது என்பது குறித்து நேற்று மத்திய தொல்பொருள் துறை இயக்குனர் வித்யாவதி புதுடெல்லியில் இருந்து தன்னுடன் வந்திருந்த தொல்லியல் துறையின் வேதியிலில் பிரிவு வல்லுனர்களுடன் கடற்கரை கோவில், ஐந்துரதத்தை சுற்றி பார்த்து ஆய்வு செய்தார். அப்போது தன்னுடன் வந்திருந்த வேதியியல் பிரிவு வல்லுனர்கள், அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். அவருடன் சென்னை வட்ட தொல்பொருள் துறை கண்காணிப்பாளர்சுப்பிரமணியம், திருச்சி வட்ட தொல்பொருள்துறை கண்காணிப்பாளர் அருள்ராஜ், மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் சரவணன் மற்றும் தொல்லியல் துறையின் வேதியியல் பிரிவு வல்லுனர்கள், அதிகாரிகள் பலர் வந்திருந்தனர்.

Similar News