செய்திகள்
வெளி மார்க்கெட்டில் நிதி பெற்று மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்: பிரதமருக்கு நாராயணசாமி கடிதம்
ஆர்.பி.ஐ. அல்லது வெளி மார்க்கெட்டில் நிதி பெற்று மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா வைரஸ் மற்றும் பொருளாதாரம் சீரழிவு ஆகியவற்றால் மாநில அரசுகளால் அதிக அளவில் நிதி திரட்ட முடியாத நிலை உள்ளது. கொரோனா தடுப்பிற்கு அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது. மாநில அரசுகளுக்கு போதுமான நிதியை மத்திய அரசு அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையையும் இழுத்து அடிக்கிறது.
இந்நிலையில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ‘‘ஆர்.பி.ஐ. அல்லது வெளி மார்க்கெட்டில் நிதி பெற்று மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.