செய்திகள்
திருமண ஏக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
காரைக்காலில் திருமண ஏக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
காரைக்கால்:
காரைக்கால் கேட்டுச்சேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 26). வெல்டிங் தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை. இவரது தாயார் தேனு, தம்பி பாலாஜி ஆகியோருடன் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மணிகண்டன் அவரது நண்பர்களுடன் ஜி.எஸ்.டி. களத்தில் அமர்ந்து மது குடித்தனர்.
அப்போது மணிகண்டன் தனது நண்பர்களை முன்னால் செல்லும்படி தான் பின்னால் வருவதாகவும் கூறினார். வெகு நேரமாகியும் அவர் வராததால் அவரது நண்பர்கள் மதுகுடித்த இடத்திற்கு சென்றுபார்த்தனர். அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் மணிகண்டன் தூக்கில் தொங்கினார். இதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கோட்டுச்சேரி போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் இளமுருகு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் திருமண ஏக்கத்தில் மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.