செய்திகள்
வேலைவாய்ப்புத்துறை சார்பில் வங்கி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் வருகிற 31-ந் தேதி முதல் நடைபெற உள்ளது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தற்போது வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தால் புரபேஷனரி அலுவலர் பணியிடத்துக்கான முதல் நிலை தேர்வுகள் வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் வருகிற 31-ந் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி பெற விரும்புபவர்கள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.