செய்திகள்
கீழடியில் அகழாய்வு

மழையால் கீழடி பகுதியில் அகழாய்வு பணி நிறுத்தம்

Published On 2020-08-28 02:08 GMT   |   Update On 2020-08-28 02:08 GMT
கீழடி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக ஆராய்ச்சிக்காக தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் இந்த பகுதியில் பணிகள் நடைபெறவில்லை.
திருப்புவனம்:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனைச் சேர்ந்தது, கீழடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட இடங்களில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் 5 கட்டங்களாக அகழாய்வு நடைபெற்றதில் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய தமிழர்களின் நாகரிகம் மற்றும் வாழ்க்கை வரலாற்று முறைகளை தொல்லியல் துறையினர் கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இப்பணிகள் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஏராளமான அரிய பொருட்கள் அங்கு கண்டெடுக்கப்பட்டு இருப்பதால் பணிகள் தொடர்ந்து மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் கீழடி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக ஆராய்ச்சிக்காக தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் இந்த பகுதியில் நேற்று பணிகள் நடைபெறவில்லை.

மாநில தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் குழிகளில் போட்டிருந்த தார்ப்பாய்களை அப்புறப்படுத்தி அந்த குழியில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றி வெயிலில் உலர வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News