செய்திகள்
போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஆலங்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆலங்குடி:
ஆலங்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு பாரதி, சுந்தர், கருப்பையா ஆகியோர் தலைமை தாங்கினர். தனியார் பஸ்சை வாடகைக்கு எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும். தொழிலாளர்களிடமிருந்து பறிக்கப்பட்ட விடுப்பு மற்றும் சம்பளத்தை திரும்ப தர வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணப்பயனை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டது. இதில் எல்.பி.எப், சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி, டி.டி.எஸ்.எப்., ஏ.ஏ.எல்.எல்.எப். ஆகிய போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
இதேபோல் இலுப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கிளை செயலாளர் சேதுராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு, ஓய்வு பெற்றோர் நல சங்கம் சார்பாக நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. மத்திய சங்க தலைவர் அடைக்கலம் தலைமை தாங்கினார். இதில் போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.