செய்திகள்
கொரோனா தொற்று கட்டுப்பாட்டு அறை தொடக்கம்
அறந்தாங்கி வருவாய் கோட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உள்ளது.
அறந்தாங்கி:
அறந்தாங்கி வருவாய் கோட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அனைவரும் கொரோனா தொற்று சம்பந்தமான தகவல்கள் மற்றும் புகார்களை அறந்தாங்கி உதவி கலெக்டர் அலுவலகம் 04371 220589, தாசில்தார் அலுவலகங்கள் 93619 73878 (அறந்தாங்கி), 04371 233325 (ஆவுடையார் கோவில்), 04371 250569 (மணமேல்குடி) உள்ளிட்ட கட்டுப்பாடு அறை எண்களை தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கலாம். இந்த தகவலை அறந்தாங்கி உதவி கலெக்டர் ஆனந்த் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.