செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

கொரோனா பரிசோதனை முடிவு வர காலதாமதம்- பொதுமக்கள் அவதி

Published On 2020-07-21 15:12 IST   |   Update On 2020-07-21 15:12:00 IST
குடியாத்தம் பகுதியில் கொரோனா பரிசோதனைக்கு சளி மாதிரியை கொடுத்த பொதுமக்கள், முடிவு காலதாமதமாக வருவதால் அவதிப்படுகின்றனர்.
குடியாத்தம்:

குடியாத்தம் நகரம், கிராமங்களில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா அறிகுறியாக காய்ச்சல், தும்பல், இருமல், சளியால் பாதிக்கப்படும் நபர்களிடம் இருந்து மருத்துவக் குழுவினர் சளி மாதிரியை சேகரித்து கொரோனா தொற்று பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். சம்பந்தப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானால், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். அவர்களுடன் தொடர் கொண்டவர்களின் சளி மாதிரியை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பப்படுகிறது. அதன் முடிவின்படி பாதிக்கப்பட்டவர்களை குடியாத்தம், வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

சளி மாதிரியை பரிசோதனைக்காக கொடுத்த பலருக்கு, அதன் முடிவு வர காலதாமதம் ஆவதால், அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளாமல் பல நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். இதனால் குடியாத்தம் பகுதியில் கொரோனா தொற்று அதிகரிக்கிறது. சமீபத்தில் வேலூர் கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில் கொரோனா பரிசோதனை முடிவு 48 மணி நேரத்தில் தெரிவிக்கப்படும், எனக் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து சில நாட்கள் மட்டும் தான் உடனுக்குடன் கொரோனா தொற்று பரிசோதனை முடிவு வந்தது. தற்போது மீண்டும் காலதாமதமாக வருகிறது. சளி மாதிரியை கொடுத்த பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

Similar News