செய்திகள்
முககவசம்

முககவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.8 ஆயிரம் அபராதம் வசூல்

Published On 2020-07-21 14:52 IST   |   Update On 2020-07-21 14:52:00 IST
பெருந்துறை பகுதியில் முககவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.8 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
பெருந்துறை:

பெருந்துறை பேரூராட்சி செயல் அதிகாரி மோகனரங்கன் தலைமையில் பணியாளர்கள் கடந்த 2 நாட்களாக பெருந்துறையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாமல் வந்ததால் 61 பேரிடம் இருந்து தலா ரூ.50 என மொத்தம் ரூ.3 ஆயிரத்து 50 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

இதேபோல் பெருந்துறையை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி செயல் அதிகாரி கிருஷ்ணன் தலைமையில் கடந்த 2 நாட்களாக நடந்த வாகன சோதனையில் முககவசம் அணியாமல் வந்ததாக 99 பேருக்கு தலா ரூ.50 என மொத்தம் ரூ.4 ஆயிரத்து 950 அபராதமாக வசூல் செய்யப்பட்டது. பெருந்துறை பகுதியில் நடந்த சோதனையின் போது முககவசம் அணியாத மொத்தம் 160 பேரிடம் இருந்து ரூ.8 ஆயிரம் அபராதத்தை அதிகாரிகள் வசூல் செய்தனர்.

Similar News