செய்திகள்
தற்கொலை

மலையம்பாளையம் அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2020-07-20 20:39 IST   |   Update On 2020-07-20 20:39:00 IST
மலையம்பாளையம் அருகே மரத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊஞ்சலூர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 41). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தி. இருவரும் கடந்த 2½ மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் மலையம்பாளையத்துக்கு கரும்பு வெட்டும் கூலிவேலைக்கு வந்திருந்தார்கள். மலையம்பாளையம் அருகே உள்ள வாத்தியார் காட்டு வலசு என்ற இடத்தில் தங்கிக்கொண்டு அங்குள்ள வடிவேல் என்பவரின் தோட்டத்தில் வேலை செய்து வந்தார்கள்.

ஜெய்சங்கருக்கு மதுபழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அதனால் சாந்தி கணவரை கண்டித்ததாக தெரிகிறது. இந்தநிலையில் சாந்தி தூங்கிய பின்னர் எழுந்து வெளியே சென்ற ஜெய்சங்கர் அங்குள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி நேற்று காலை தகவல் கிடைத்ததும், மலையம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News