செய்திகள்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை விரைவில் தரம் உயர்த்தப்படும் -முதல்வர் உறுதி

Published On 2020-07-17 11:31 IST   |   Update On 2020-07-17 11:31:00 IST
பல்வேறு வகையில் வளர்ந்து வரும் மாவட்டமாக ஈரோடு திகழ்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
ஈரோடு: 

ஈரோட்டில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டத்தில் ரூ.53.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

விழாவில் பேசிய முதலமைச்சர், பல்வேறு வகையில் வளர்ந்து வருகிற மாவட்டமாக ஈரோடு திகழ்கிறது என்றார்.  மஞ்சள் சந்தைக்கு புகழ்பெற்றது ஈரோடு மாவட்டம் எனவும் புகழாரம் சூட்டினார். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை விரைவில் தரம் உயர்த்தப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார். 

மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Similar News