செய்திகள்
நகைக்கடைகள் மூடல்

கொரோனா அச்சுறுத்தல்- காரைக்காலில் 22ந்தேதி வரை நகைக்கடைகள் மூடல்

Published On 2020-07-16 12:38 IST   |   Update On 2020-07-16 12:38:00 IST
காரைக்காலில் வாடிக்கையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி 22ந்தேதி வரை நகைக்கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்று நகைக்கடைகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
காரைக்கால்:

காரைக்காலில் 4-ம் கட்ட ஊரடங்கு வரை கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அதன்பிறகு ஊரடங்கு தளர்வு காரணமாக சென்னை மற்றும் பிறபகுதிகளில் இருந்து வந்தவர்களால் அங்கு கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை 99 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

காரைக்காலில் நகைக்கடைகள் அதிகம் உள்ள திருநள்ளாறு ரோடு, மாதா கோவில், வயல்கரை ஆகிய வீதிகளை சுற்றி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் வாடிக்கையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 90-க்கும் மேற்பட்ட நகைக்கடைகளை ஒருவாரத்துக்கு தற்காலிகமாக மூடுவது என முடிவு செய்து அதற்கான அறிவிப்பை நகைக்கடைகள் சங்க தலைவர் செல்வராஜ் வெளியிட்டார். அதன்படி நகைக்கடைகள் மூடப்பட்டன. தொடர்ந்து வருகிற 22-ந் தேதி வரை இந்த கடைகள் மூடப்பட்டு இருக்கும்.

Similar News