செய்திகள்
தமிழ் அறிஞர் மறைந்த மன்னர் மன்னன் படத்திறப்பு நிகழ்ச்சி

லாஸ்பேட்டை கல்வி நிறுவனத்துக்கு மன்னர் மன்னன் பெயரை சூட்ட கோரிக்கை

Published On 2020-07-16 06:54 GMT   |   Update On 2020-07-16 06:54 GMT
புதுச்சேரியின் முதன்மையான சாலை மற்றும் லாஸ்பேட்டையில் உள்ள அரசு கல்வி நிறுவனத்துக்கு மன்னர் மன்னன் பெயரை சூட்டவேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
புதுச்சேரி:

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் மகனும், தமிழ் அறிஞருமான மறைந்த மன்னர் மன்னன் படத்திறப்பு நிகழ்ச்சி புதுவை காந்தி நகரில் உள்ள அவரது இல்லம் அருகே நடந்தது. சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமை தாங்கினார். மன்னர் மன்னன் மகனும், பாரதிதாசன் அறக்கட்டளை தலைவருமான கோ.பாரதி வரவேற்றார். காந்திநகர் மக்கள் நல்வாழ்வு சங்க தலைவர் திருவேங்கடம், துணைத்தலைவர் ஜெயபால், செயலாளர் ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மன்னர் மன்னன் உருவப்படத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது, புதுச்சேரியின் முதன்மையான சாலை மற்றும் லாஸ்பேட்டையில் உள்ள அரசு கல்வி நிறுவனத்துக்கு மன்னர் மன்னன் பெயரை சூட்டவேண்டும், பாரதிதாசன் நினைவிட வளாகத்தில் மன்னர் மன்னன் நினைவிடத்திற்கு மண்டபம் அமைக்கவேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
Tags:    

Similar News