செய்திகள்
கோப்புப்படம்

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 147 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-07-16 11:26 IST   |   Update On 2020-07-16 11:26:00 IST
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 147 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,743 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 32,695 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 606 பேர் உயிரிழந்துள்ளனர்.    

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,75,640 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,52,613 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 10,928 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 1,51,820 பேருக்கும், டெல்லியில் 1,16,993 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லா அளவுக்கு 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,743ஆக உயர்ந்துள்ளது. 947 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

Similar News