செய்திகள்
சுருக்குமடி வலையை அனுமதிக்க கோரி மீனவர்கள் தொடர் போராட்டம்- தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்கக்கோரி கடலூர் மற்றும் நாகையில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
கடலூர்:
தமிழகத்தில் கடலோர மீனவர்கள் சுருக்குமடி வலைகள் மற்றும் இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட இந்த வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடர்கிறது.
இந்த வலைகளுக்கான தடையை நீக்க வேண்டும் என சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த வலையை பயன்படுத்தாத மீனவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கடலூரில் சுருக்குமடி வலை தொடர்பாக இருதரப்பு மீனவர் குழுக்களிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுருக்குமடி வலையில் பிடித்த மீன்களை கடலூர் மீனவர்கள் 7 வாகனம் மூலம் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு எடுத்துச்சென்றனர். புதுச்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அந்த வாகனங்களை போலீசார் உதவியுடன் மீன்வளத்துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்து, மீன்களை பறிமுதல் செய்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், சுருக்குமடி வலைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி பல்வேறு பகுதிகளில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிதம்பரம் எம்.ஜி.ஆர் திட்டு மீனவ கிராமப் பெண்கள் திடீரென கடலில் இறங்கி போராடியதோடு, தலையில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
மாவட்ட நிர்வாகம், மீன்வளத்துறை அலுவலகம் சுருக்குமடி வலைக்கு தடை விதித்ததற்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், படகுகளில் கருப்பு கொடிகளை கட்டி, தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, மீனவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் கடலூர் சில்வர்பீச்சில் திரண்ட மீனவர்கள், தர்ணாவில் ஈடுபட்டனர். கடலில் அனைத்து படகுகளையும் நிறுத்தி, அதில் கருப்பு கொடி கட்டி, எதிர்ப்பை தெரிவித்தனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இதேபோல் நாகை மாவட்டத்தில், சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்க கோரியும், எதிர்ப்பு தெரிவித்தும் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
சுருக்குமடி வலையை பயன்படுத்துவது தொடர்பாக நம்பியார் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, அரசு அதிகாரிகள் மற்றும் போலீசாரை முற்றுகையிட்டு மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிடிக்கப்பட்ட மீன்களை பறிமுதல் செய்யக் கூடாது என தெரிவித்த மீனவர்கள், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருவதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.