செய்திகள்
அபராதம்

665 கடைகளுக்கு ரூ.56 ஆயிரம் அபராதம்

Published On 2020-07-07 07:59 GMT   |   Update On 2020-07-07 07:59 GMT
கோவை அருகே 665 கடைகளுக்கு ரூ.56 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை:

கொரோனா பரவலை தடுக்க கடைகள் மற்றும் பொதுஇடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? என்று மாநகராட்சி கண்காணிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். நேற்றும் அபராதம் விதிக்கும் பணி நடைபெற்றது. கோவை மேற்கு மண்டலத்தில் 177 கடைகளுக்கு ரூ.17,500, கிழக்கு மண்டலத்தில் 40 கடைகளில் ரூ.3,700, மத்திய மண்டலத்தில் 55 கடைகளுக்கு ரூ.6,100, வடக்கு மண்டலத்தில் 141 கடைகளுக்கு ரூ.14,200, தெற்கு மண்டலத்தில் 252 கடைகளுக்கு ரூ.15,050 என மொத்தம் 665 கடைகளுக்கு ரூ.56,550 அபராதம் விதிக்கப்பட்டது.

முகக்கவசம் அணியாமலும், வருகை பதிவேடுகளை பேணாமலும், கிருமிநாசினி மருந்துகள் பயன்படுத்தப்படாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை மாநகராட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News