செய்திகள்
அறந்தாங்கியில் போலீஸ் நிலையம் முன் தீக்குளித்த பெண் உயிரிழப்பு
போலீஸ் நிலையம் முன் தீக்குளித்த பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்.என்.புரம் காந்தி நகரை சேர்ந்தவர் பாண்டி என்ற ராஜேந்திரன். இவர் திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். இவரது மனைவி செல்வி(வயது 40). இவர்களுக்கு திவாகர் என்ற மகனும், ஜோதிகா, ராதிகா என்ற மகள்களும் உள்ளனர்.
கடந்த ஆண்டு ஒரு திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவராக அறந்தாங்கியை சேர்ந்த விஜய் என்பவரை அறந்தாங்கி போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், திருட்டு நகைகளை செல்வியிடம் கொடுத்து விற்பனை செய்ய சொன்னதாக போலீசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் எல்.என்.புரத்திற்கு சென்று செல்வியிடம், விஜய் கொடுத்த திருட்டு நகைகள் அனைத்தையும் கொடுக்குமாறு கேட்டுள்ளனர். இதையடுத்து அவர் நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் போலீசார், செல்வியிடம் மேலும் திருட்டு நகை இருந்தால், அதையும் கொடுக்க வேண்டும் என்றும், மறுநாள் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வரவேண்டும் என்றும் கூறி விட்டு சென்றுள்ளனர். விசாரணைக்கு வருமாறு போலீசார் கூறுகிறார்களே என்று செல்வி அச்சமடைந்ததாக தெரிகிறது. இதையடுத்து கடந்த 7-ந் தேதி காலை அறந்தாங்கி போலீஸ் நிலையத்தின் முன் வந்த செல்வி, தான் கொண்டு வந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டு போலீஸ் நிலையத்துக்குள் ஓட முயன்றார். அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தி, உடலில் எரிந்த தீயை அணைத்து சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.