செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

நாகை மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு - எண்ணிக்கை 219 ஆக அதிகரிப்பு

Published On 2020-06-23 15:24 IST   |   Update On 2020-06-23 15:24:00 IST
நாகை மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது.
நாகப்பட்டினம்:

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நாகை மாவட்டத்திலும் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி மாவட்டத்தில் 202 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இந்தநிலையில் நேற்று மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 16 பேர் சென்னை மற்றும் கேரளாவில் இருந்து நாகை வந்தவர்கள் ஆவர். புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது. இதில் 84 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர். 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Similar News