செய்திகள்
வாய்மேடு அருகே சரக்கு ஆட்டோ மோதி தொழிலாளி பலி
வாய்மேடு அருகே சரக்கு ஆட்டோ மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாய்மேடு:
நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள ஆயக்காரன்புலம் சிங்கன் குத்தகை பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது60). கூலித்தொழிலாளி. இவர் நேற்று தனது உறவினர் மணிகண்டன் என்பவருடன் வாய்மேடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வாய்மேடு அருகே மருதூர் பிள்ளையாரடி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக சென்ற சரக்கு ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த மகாலிங்கம் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகாலிங்கம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தானமேரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.